பரீட்சை வினாத் தாள் தாமதம் – யாழ் கல்வி வலயப் பாடசாலைகளில் குழப்பம்!

Friday, July 27th, 2018

யாழ்ப்பாணக் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணைப் பரீட்சைக்கான பாட வினாத்தாள்கள் உரிய நேரத்தில் கிடைக்காமையால் பாடசாலைகளில் நேற்று குழப்பம் ஏற்பட்டது.

அச்சுப் பதிப்பில் ஏற்பட்ட தாமதமே பரீட்சை நேரம் தாழ்த்தி ஆரம்பித்தமைக்கு காரணம் என்று யாழ்ப்பாணம் வலய கல்வி பணிமனை தெரிவித்தது.

இரண்டாம் தவணைக்குரிய பரீட்சைக்கான நேர அட்டவணைகள் வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தால் அனைத்து வலயங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கேற்ப வடக்கு மாகாணத்தின் 12 கல்வி வலயத்திலும் ஒரே நேரத்தில் நேர அட்டவணையின் அடிப்படையில் பரீட்சைகள் நடைபெற்று வருகின்றன.

இதனடிப்படையில் ஒவ்வொரு பாடசாலையும் தத்தமது கோட்டக் கல்வி அலுவலகத்துக்குச் சென்று குறித்த நாளுக்குரிய வினாத்தாள்களைப் பெற்றுப் பரீட்சைகளை நடத்தின. இதேபோல் நேற்று யாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட கல்விக் கோட்டங்களில் குறித்த பாடங்களுக்கான வினாத்தாள், பரீட்சை தொடங்கும் நேரத்துக்கு கிடைக்கப் பெறாமையால் மாணவர்கள் குழம்பியுள்ளனர். இதனால் பரீட்சைகள் நேரம் தாழ்த்தி நடைபெற்றுள்ளது. இது தொடர்பில் வலய கல்வி பணிமனையுடன் தொடர்புகொண்டு கேட்டபோது:

ஒப்பந்த அடிப்படையில் கேள்வி கோரல் முறையில் பரீட்சை வினாத்தாள்களை அச்சிட அச்சுப் பதிப்பு நிறுவனத்திடம் வழங்கியிருந்தோம். அச்சுப்பதிப்பில் ஏற்பட்ட தாமதமே பரீட்சைகள் ஆரம்பமாகத் தாமதமானது.

ஆனாலும் 1.30 மணிக்குப் பரீட்சைகள் நிறைவடைந்தன. இனிவரும் காலங்களில் இந்த தவறுகள் இடம்பெறாத வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர்.

Related posts:

சிலரின் செயற்பாடுகள் நாடாளுமன்றத்தை பலவீனமடைய செய்கின்றது – அமைச்சர் பந்துல குற்றச்சாட்டு!
அனைத்து இலங்கையர்களுக்கும் தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு எனது அரசாங்கம் மேற்கொண்டு வரும் பணிகள்...
பெண்டோரா பேப்பர்ஸிலுள்ள இலங்கையர்கள் குறித்து உடன் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவு!