பரீட்சை வினாத்தாள்களை அச்சிடும் விடயம் தொடர்பில் அதிக பாதுகாப்பு – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!
Wednesday, March 1st, 2017பரீட்சை வினாத்தாள்களை அச்சிடும் விடயத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்த பரீட்சைகள் திணைக்களம் ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரவித்துள்ளார்.
தரவு வங்கியிலிருந்து வினாக்கள் பெறப்பட்டு இடைக்கிடை வினாக்களும் அச்சாகவுள்ளன. பரீட்சை வினாத்தாள்களை மட்டுப்படுத்தப்பட்ட சிலர் மீள்பரிசீலித்து அச்சுக்குச் சமர்ப்பிப்பார்கள் என்றும் புஷ்பகுமார தெரிவித்தார்.
விஞ்ஞானம் போன்ற ஒரு பாடத்தக்கு 3000 வினாக்கள் இருக்கும். தேவைப்பட்ட வினாக்களே தெரியப்பட்டு அச்சுக்கு அனுப்பப்படவுள்ளன.
மட்டுப்படுத்தப்பட்டவர்கள் மட்டுமே பத்திரத்திலுள்ள சரியான வினாக்களை அறிவர். வினாத்தாள்கள் அச்சாகி சம்பந்தப்பட்ட பரீ ட்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் வரை இந்நடைமுறையே இருக்கும்.
இப்பணிகளுக்காக 570 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய கட்டடத்தில் இதற்கான கருவிகள் பொருத்தப்படும். இக்கட்டடம் பரீட்சைகளுக்காகவும் பயன்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|