பரீட்சை மதிப்பீட்டுப் பணியில் ஈடுபடும் கிறிஸ்தவ ஆசிரியர்களுக்கு அரைநாள் லீவு!

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மதிப்பீட்டுப் பணியில் ஈடுபடும் கிறிஸ்தவ ஆசிரியர்கள் எதிர்வரும் 24 ஆம் திகதி அரைநாளுடன் வீடு செல்ல முடியும்.
எதிர்வரும் டிசெம்பர் 23 ஆம் திகதி இவ்வருடம் இடம்பெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் மதிப்பீட்டுப் பணி ஆரம்பமாகின்றது.
இந்நிலையில் எதிர்வரும் 25 ஆம் திகதி நத்தார் பொது விடுமுறை. அதனால் அன்றைய தினம் மதிப்பீட்டுப் பணி இடம்பெறாது எனவும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனினும் கிறிஸ்தவ ஆசிரியர்களுக்கு நத்தார் தின ஆரம்ப செயற்பாடுகள் மற்றும் நள்ளிரவு திருப்பலிகளுக்கான பங்குபற்றலுக்காக டிசெம்பர் 24 ஆம் திகதி முழுநாள் விடுகையோ அல்லது அரைநாள் விடுகையோ வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் பரீட்சை ஆணையாளருக்கு கோரிக்கை விடுத்தது.
இதற்கமைய விரும்பும் கிறிஸ்தவ ஆசிரியர்கள் எதிர்வரும் 24 ஆம் திகதி அரை நேரத்துடன் செல்ல அனுமதிக்கப்படுவர் என பரீட்சை ஆணையாளர் இலங்கை ஆசிரியர் சங்கத்திடம் உறுதியளித்துள்ளார்.
Related posts:
|
|