பரீட்சை நிலையங்களுக்குள் கைத்தொலைபேசிக்குத் தடை!

க.பொ.த உயர்தர பரீட்சை நிலையங்களுக்குள் கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்ல வேண்டாமென பரீட்சைகள் திணைக்களம் மாணவர்களை அறிவுறுத்தியுள்ளது.
இந்தச் சட்ட விதிமுறைகளையும் மீறி எடுத்துவரப்படும் கையடக்கத் தொலைபேசிகளை பரீட்சை நடைபெறுவதற்கு முன்கூட்டியே உடனடியாகப் பறிமுதல் செய்து அவற்றின் செயற்பாடுகளைச் செயலிழக்கச் செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முதற்தடவையாக அறிமுகம் செய்யப்படும் இந்தத் திட்டத்தின் கீழ் இம்முறை நாடு முழுவதிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட பரீட்சை நிலையங்களுக்கே இது நடைமுறைப்படுத்தப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளரின் வேண்டுகோளுக்கிணங்க தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு இதற்கான ஒத்துழைப்பை வழங்க முன்வந்திருக்கிறது.
அண்மைக்காலமாக கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்களைப் பயன்படுத்தி பரீட்சை மோசடிகளில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது.
இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள பரீட்சைகள் ஆணையாளர் இதன் காரணமாக பரீட்சை நிலையங்களுக்கு வெளியில் இருப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|