பரீட்சை நடைபெறும் பாடசாலைகளை மையப்படுத்தி நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம்!

O/L பரீட்சை நடைபெறும் பாடசாலைகளை மையப்படுத்தி வரும் வியாழன், வெள்ளி ஆகிய தினங்களில் நுளம்பு ஒழிப்புத் வேலைத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பணியகத்தின் விசேட வைத்திய நிபுணர் பிரேசிலா சமரவீர தெரிவித்துள்ளார்
டெங்கு நுளம்புகளை ஒழிப்புவது இதன் நோக்கமாகும். மேல் மாகாணத்தில் பாடசாலை மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டத்திற்கு ஜனாதிபதி விசேட நுளம்பு ஒழிப்புப் பணியகத்தின் படைப்பிரிவின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படும். ஆகக்கூடுதலான டெங்கு நோயாளர்கள் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏனைய மாவட்டங்களிலும் நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம், சுகாதார வைத்திய அதிகாரிகள் மட்டப் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
Related posts:
தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவு : ஏழு நாள் அரசு முறை துக்கம்!
தென்னை மரங்களை வெட்ட பிரதேச செயலாளரின் அனுமதி பெறுவது அவசியம் –- தெங்கு, கித்துள், பனை தொடர்பான இராஜ...
சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் 6 ஆயிரம் இடங்கள் அடையாளம் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்ப...
|
|