பரீட்சை திணைக்கள பெறுபேறுகளை ஒன்லைன் மூலம் உறுதி செய்தல்!

Friday, April 27th, 2018

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் பெறுபேறுகளை ஒன்லைன் முறையில் உறுதி செய்ய முடியும்.

இதன் முதற்கட்ட நடவடிக்கை நேற்று முன்தினம் ஆரம்பமானது. 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட சான்றிதழ்களின் பெறுபேறுகள் உறுதி செய்வதற்காக பரீட்சை திணைக்களத்தில் கிடைக்கின்றன.

இவற்றில் பெரும்பாலானவை நாட்டிலுள்ள வலய அலுவலகங்களிலிருந்து கிடைக்கப் பெறும் கோரிக்கையாகும் என்று பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.பரீட்சை சான்றிதழை உறுதி செய்யும் நடவடிக்கையை திணைக்களத்தின் சான்றிதழ் கிளை மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.

உறுதி செய்வதற்கான கோரிக்கையை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்போது இடம்பெறும் முறைகேடுகள், காலதாமதம் ஆகியவற்றை தடுப்பதே இதன் நோக்கமாகும்.

இதற்காகவே இந்த ஒன்லைன் முறை கணினியுடன் நேரடி தொடர்பை கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதனூடாக வலய அலுவலகங்களுக்கு பெறுபேறுகளை உறுதி செய்யும் அதிகாரம் பரவலாக்கப்பட்டுள்ளது.

அனைத்து பணிகளும் பரீட்சை திணைக்களத்தின் முழுமையான கண்காணிப்பில் மேற்கொள்ளப்படுகின்றன.இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் பரீட்சை திணைக்களத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.எஸ்.இராதாகிருஸ்ணன், பரீட்சை திணைக்களத்தின் ஆணையாளர் சனத் பூஜித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts: