பரீட்சை திணைக்களத்தில் மாற்றம்!

Tuesday, November 14th, 2017

இலங்கைப் பரீட்சை திணைக்களத்தில் பல மாற்றங்களை கொண்டுவரவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் மத்தியில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் , பரீட்சை திணைக்களத்தின் மீது பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பரீட்சை திணைக்களத்தின் இரகசியம் மற்றும் நிறுவகத்தின் பரீட்சை பிரிவின் பிரதம அதிகாரியாக செயற்பட்ட பிரதி பரீட்சைகள் ஆணையாளரை சேவையில் இருந்து இடைநிறுத்துவதற்கு சமீபத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: