பரீட்சை எழுத முன் வினாத்தாள்களை வாசிப்பதற்கு 15 நிமிடங்கள் !

Saturday, March 31st, 2018

இனிமேல் மாணவர்கள் பொதுப்பரீட்சை எழுத முன் வினாத்தாள்களை வாசிக்க 15 நிமிடங்கள் வழங்கப்படும் அதன் பிறகே பரீட்சை எழுத அனுமதிக்கப்படுவர் என இலங்கைப் பரீட்சைகள் திணைக்கள உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

மேலும் பல யுத்திகளை மாற்றங்களை பரீட்சைகள் திணைக்களம் இவ்வாண்டிலிருந்து முன்னெடுக்கவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார் இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் 2001 ஆம் ஆண்டிற்கு பின்னரான பொதுப் பரீட்சைப் பெறுபேறுகளை உறுதிப்படுத்த வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது .பொதுப்பரீட்சை நடைபெறும் மண்டபங்களுக்கு மேற்பார்வையாளர் மற்றும் நோக்குனர்களுக்கு மேலதிகமாக மேலதிக மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர் அவர்கள் நோக்குனர்களை மேற்பார்வை செய்வார்கள்

ஓகஸ்ட் புலமைப்பரீட்சை முற்பகுதியில் நடத்தப்படவுள்ளது அதே போல கா.பொ.த சாதாரணப் பரீட்சை டிசம்பர் முதல் வாரத்திலேயே ஆரம்பிப்பதுடன் அந்த மாதத்திலேயே நடத்தி முடிக்க ஏற்பாடு செய்யப்படும் இனி மேல் கா.பொ.த மற்றும் உயர்தர சான்றிதழ்களின் பிரதிகளைப் பெற விரும்பினால் ஒன்லைனில் விண்ணப்பிக்க முடியும் அதற்கான கட்டணத்தை அருகிலுள்ள வங்கியில் செலுத்தி அதன் இலக்கத்தை ஒன்லைனில் அறிவித்தால் பிரதிகளைக் கையில் கிடைக்குமாறு அல்லது தபாலில் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

தரம்6-9 வரை ஒதுக்கப்படாத பாடவேளை என்று ஒன்றிருந்து வந்துள்ளது இனி மேல் அப்பாடவேளைக்கு தகவல் தொழில்நுட்ப சான்றிதழ் பாடத்தினை இடுமாறு கேட்கப்பட்டுள்ளது .அப் பாடத்திற்கு கல்வியற் கல்லூரி பயிற்சி முடித்தவர்களை நியமிக்க வேண்டும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்

Related posts: