பரீட்சை எழுதிய மாணவி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்!

Tuesday, August 21st, 2018

உயர்தர பரீட்சைக்கு தோற்றிவரும் மாணவி ஒருவர் பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பியவேளை கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று முல்லைத்தீவு உடையார்கட்டுப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு லூத்மாத கோவில் பகுதியில் வசிக்கும் உடையார் கட்டு மகாவித்தியாலத்தில் உயர்தர பரீட்சை எழுதிவரும் 19 வயதுடைய மாணவியே இவ்வாறு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது.

பளையினை சேர்ந்த 22 அகவையுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு பாலியல் பலாத்காரம் மேற்கொண்டார் என தகவல்க் வெளியாகியுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது –

நேற்றையதினம் பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியை வாகனம் ஒன்றில் கடத்தி சென்று பளைப்பகுதியில் வைத்து விருப்பத்திற்கு மாறாக பாலியல் துஸ்பிரயோகம் செய்துவிட்டு இன்றைய தினம் உடையார் கட்டுப்பகுதியில் கொண்டுவந்து மாணவியின் சந்தேகநபர்கள் இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.

மாணவி வீடு திரும்பாத நிலையில் நேற்று மாணவியின் தாயார் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் மாணவியை காணவில்லை என்று முறைப்பாடு செ​ய்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை குறித்த மாணவியை உடையார்கட்டுப்பகுதுயில் கொண்டுவந்து இறக்கி விட்டுள்ளார்கள். பின்னர், மாணவி நடந்த சம்பவத்தினை தாயாரிடம் முறையிட்டுள்ளார்

குறித்த மாணவியுடன் தாயார் பொலிஸ் நிலையம் சென்று நடந்த சம்பவத்தினை தெரியப்படுத்தியுள்ளார். அதனை தொடர்ந்து, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் கடத்திய இளைஞனை தேடி பளை சென்று கடத்தல் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த ஒரு இளைஞனை கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் கைதுசெய்யப்பட்ட இளைஞனை  நீதி மன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts:

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வருவோரால் கொரோனா பரவும் ஆபத்து - வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பா...
பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரிய...
செஸ் வரி அதிகரிக்கப்பட்டாலும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படாது - நிதி இராஜாங்க அமை...