பரீட்சை இலகுபடுத்தலை ஆராயக் குழு நியமனம் – பரீட்சைத் திணைக்களம்!

Saturday, June 30th, 2018

பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் பரீட்சைகளை இலகுபடுத்துவது தொடர்பில் ஆராய்வதற்குச் சிறப்புக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் பரீட்சைகள் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள் 5 பேர், சிறப்பு மருத்துவ நிபுணர்கள் 5 பேர் மற்றும் கல்வி அமைச்சின் மூத்த அதிகாரிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தரம்1,2 மற்றும் 3 ஐச் சேர்ந்த மாணவர்களின் பரீட்சைகளை இலகுபடுத்துவது தொடர்பில் இந்தக்குழு ஆய்வு முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆரம்பப்பிரிவு மாணவர்களின் மனநிலைக்கு ஏற்றவிதத்தில் பரீட்சை நடைமுறையை மாற்றுவதே இதன் நோக்கமாகும்.

இந்தக் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் அதைக் கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts: