பரீட்சைக் கடமை வளவாளர் குழாமில் இணைவதற்கான விண்ணப்பம் கோரல்!

Saturday, March 17th, 2018

இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் நடத்தப்படும் பாடசாலை பொதுப் பரீட்சைகள் தவிர்ந்த ஏனைய பரீட்சைகளுக்கான பரீட்சைக் கடமை தொடர்பான வளவாளர் குழாமில் இணைந்து கொள்வதற்கான விண்ணப்பங்களை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கோரியுள்ளார்.

அமைச்சுக்கள், திணைக்களங்கள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்களில் கடமையாற்றும் விரிவுரையாளர்கள், அந் நிறுவனங்களில் இருந்து ஓய்வு பெற்றோர் மேற்படி குழாமில் இணைந்து கொள்ளலாம்.

வினாத்தாள் தயாரித்தல், வினாத்தாள்களை மொழி பெயர்த்தல், விடைத்தாள் மதிப்பிடல், புள்ளியிடல், மதிப்பீட்டுக்கும் பரீட்சித்தலுக்குமான ஆலோசனைகள் என்பன தொடர்பானவற்றில் தெரிவு செய்யப்படுவோர் ஈடுபடுத்தப்படுவர்.

சமயம், மொழி, கணிதம், விஞ்ஞானம், எந்திரவியல், தொழில்நுட்பவியல், முகாமைத்துவம், வணிகவியல், கணக்கீடு, கணக்காய்வு, நிதி, பொருளியல், நிர்வாகம், சமூக விஞ்ஞானம், புவியியல், அழகியல், சட்டம், பொது அறிவும் கிரகித்தலும், நுண்ணறிவு, சுருக்கெழுத்து, பிரெய்லி, மொழிபெயர்வு பல்வேறு துறைகள் உள்ளிட்ட 23 வகையான துறைகளில் வளவாளர் குழாம் அமைக்கப்படவுள்ளது.

பரீட்சைத் திணைக்கள வரலாற்றில் முதற் தடவையாக பகிரங்க விண்ணப்பம் கோரி வளவாளர் குழாம் ஏற்படுத்தப்படுகிறது. தெரிவு செய்யப்படுவோருக்கு பெற்றுக்கொள்ளப்படும் சேவைக்கமைய கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படுமென இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. வளவாளர் குழாமில் இணைந்துகொள்ள விரும்புவோர் தமது விண்ணப்பங்களை பரீட்சை ஆணையாளருக்கு அனுப்பி வைக்கலாம்.

Related posts: