பரீட்சைக்கு தோற்றும் முஸ்லிம் மாணவிகளுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!

நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர (உயர் தர) பரீட்சைக்கு தோற்றும் முஸ்லிம் மாணவிகள் பர்தாவினை கழற்றத் தேவையில்லை என பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தேவையான அனைத்து அறிவுறுத்தல்களையும் பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கு வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சில பகுதிகளில் பர்தாவை கழற்றி விட்டு உயர் தர பரீட்சைக்கு தோற்றவருமாறு வற்புறுத்தப்பட்ட சம்பவங்கள் நேற்று இடம்பெற்றதாக சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டன.
இதனையடுத்து பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜிதவினை தொடர்புகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கல்வி பொதுத் தராதர (உயர் தர) பரீட்சை ஆரம்பமாகிவிட்டன. நிட்டம்புவ பிரதேசத்தில் பரீட்சைக்கு தோற்றச் சென்ற முஸ்லிம் மாணவிகள் பர்தாவினை கழற்றத் தெரிவிக்கப்பட்டதாக எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
பரீட்சைக்கு தோற்றும் முஸ்லிம் மாணவிகள் பர்தாவினை கழற்ற வேண்டிய எந்தத் தேவையுமில்லை. இது தொடர்பில் தேவையான அனைத்து அறிவுறுத்தல்களையும் பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கு வழங்கியுள்ளேன். ஆனால், பரீட்சார்த்திகள் அனைவரும் தங்களின் காதினை வெளிப்படுத்த வேண்டும்” என்றார்.
Related posts:
|
|