பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களுக்கு விஷேட அறிவித்தல் – பரீட்சைகள் திணைக்களம்!

இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் 2 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
நாடு பூராகவும் உள்ள 4 ஆயிரத்து 987 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதுடன் இம்முறை 7 இலட்சத்து 17 ஆயிரத்து 8 பேர் இந்தப் பரீட்சைக்குத் தோற்ற உள்ளனர்.
தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அவ்வாறு அனுமதி அட்டைகள் கிடைக்காத பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் WWW.doenets.lk என்ற இணையத்தளத்தில் தமது அடையாள அட்டை இலக்கத்தை பதிந்து பரீட்சை அனுமதி அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த இணையத்தளத்தில் News headlines என்ற பகுதிக்குள் பிரவேசித்து பரீட்சை அனுமதி அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என அந்த திணைக்களத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு இல்லாவிடின் கீழ் உள்ள இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு பெக்ஸ் மூலம் அனுமதி அட்டைகளை பெற்றுக் கொள்ள முடியும்.
தொலைபேசி இலக்கங்கள் – 0112 78 42 08 / 0012 78 45 37/ 0113 18 38 50 / 0113 14 03 14 பெக்ஸ் இலக்கம் – 0112 78 44 22
Related posts:
|
|