பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் கிடைக்காதவர்கள் முறையிடலாம்!

இம்முறை நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் கிடைக்காதவர்கள் அது தொடர்பாக தமக்கு முறையிடலாம் என பரீட்சைகள் திணைக்களஆணையாளர் ஜெனரல்.டபிள்யு.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
பாடசாலை வாரியான பரீட்சாரத்திகளுக்கு அதிபர் ஊடாகவும், வெளிவாரியான பரீட்சார்த்திகளுக்கு அவர்களது சொந்த முகவரிக்கு தபால் ஊடாகவும் குறித்தஅனுமதி சீட்டுக்களை அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ளோர் தமது விண்ணப்பங்களைஅனுப்புவதற்கான கால எல்லை இம்மாதம் 15ஆம் திகதியுடன் நிறைவடைவதாகவும் தெரிவித்துள்ளார். விண்ணப்பங்கள் கிடைத்தவர்கள் தம்முடைய பெயர், தோற்றவுள்ள பாடங்கள் மற்றும் தோற்றும் மொழி என்பவற்றை சரியாக குறிப்பிட்டு பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்புமாறு ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Related posts:
நாட்டின் புதிய அரசியலமைப்பை தீர்மானிப்பது முதலமைச்சரல்ல: பிரதமர் !
இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விரைவாக தடுப்பூசி விநியோகிக்குமாறு ஜீ-7 நாடுகளிடம் யுனிசெப் கோரிக்கை!
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது - எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அறிவிப்பு!
|
|