பரீட்சைகள் பிற்போடப்படும் என வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Thursday, May 20th, 2021

இவ்வாண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சைகளை மீண்டும் பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவிக்கையில் –

2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதிமுதல் 30 ஆம் திகதி வரையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று 5ஆம் தரப் புலமைப்பரிசீல் பரீட்சையை ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 2021ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: