பரீட்சைகளுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!
Wednesday, August 2nd, 2017கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை என்பனவற்றுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை என்பனவற்றுக்கான சகல ஏற்பாடுகள் குறித்து பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவிக்கையில், உயர்தர பரீட்சை அடுத்த மாதம் எட்டாம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் மாதம் இரண்டாம் திகதி வரை இடம்பெறவுள்ளது. மூன்று இலட்சத்து 15 ஆயிரத்து 227 பேர் பரீட்சைக்கு தோற்றுகிறார்கள். தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை அடுத்த மாதம் 20ம் திகதி இடம்பெறவுள்ளது. மூன்று இலட்சத்து 56 ஆயிரத்து 778 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளார்கள் என்றார்.
இரண்டு பரீட்சைகளுக்கு முன்னரும் பாடசாலை சூழலை சுத்தப்படுத்துமாறு சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவு அதிபர்களுக்கும் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவித்துள்ளது.உயர்தர பரீட்சை தொடர்பான சட்டங்கள் கடுமையான முறையில் அமுல்படுத்தப்படவுள்ளன. ஆயிரத்து 700 அதிகாரிகள் மேற்பார்வை பணியில் ஈடுபடவுள்ளார்கள் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|