பரீட்சைகளில் தோற்றும் மாணவர்களின் நலன் கருதி விசேட பேருந்து சேவை – இலங்கை போக்குவரத்து சபை!

நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக 770 சிசுசெரிய பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் முடிவடையும் வரை குறித்த இந்த பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் என இலங்கை போக்குவரத்து சபை மேலும் தெரிவித்துள்ளது.
இந்த பேருந்துகள் சேவையில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்பட்டால் 011 – 7 555 555 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு முறைப்பாடுகளைப் பதிவு செய்ய முடியும் எனவும் இலங்கை போக்குவரத்து சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
பொலிஸாருக்கு எதிராக முறையிட புதிய இணையத்தளம் அறிமுகம்!
விமான நிலையம் திறக்கப்படும் திகதியில் மீண்டும் தாமதம் - விமான நிலையம் மற்றும் சேவையின் உப தலைவர்!
சிறு விற்பனையாளர்களுக்கு கடன் அடிப்படையில் எரிவாயுவை விநியோகம் - லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
|
|