பரீட்சார்த்திகள் அனைவருக்கும் நீதியும் நியாயமும் நிறைவேற்றப்படும் – பரீட்சைகள் ஆணையாளர்!

Saturday, January 5th, 2019

நாடு முழுவதும் உள்ள அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் நீதியும், நியாயமும் நிறைவேற்றப்படும் வகையில் செயற்படுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் கடமைப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தமது திணைக்களம் சட்டரீதியான பொறுப்பைக் கொண்டுள்ளதாகவும் அறிக்கை ஒன்றின் ஊடாக அவர் தெரிவித்துள்ளார்.

பெறுபேறு வெளியீடுகளின் போது ஒவ்வொரு விடயதானங்களுக்கும் அமைவாக நாடு முழுவதும் ஆரம்ப நிலைகளை பெற்ற பரீட்சார்திகளின் விபரங்களை வெளியிடுவதானது அவர்களை ஊக்கப்படுத்துவதாக அமையும் என கருதுவதாகவும் குறித்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: