பரிசுப் பொருட்களை விரும்பாத முன்னாள் பொலிஸ் மா அதிபர்!

Wednesday, April 13th, 2016

முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோன் தனக்குக் கிடைத்த அனைத்துப் பரிசுப் பொருட்களையும் கைவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஓய்வு பெறுவதை முன்னிட்டு வெள்ளியினாலான கலசம் ஒன்றை பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் சங்கம் அவருக்கு நினைவாக வழங்கியிருந்தது. அதனை அவர் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு அன்பளிப்புச் செய்துள்ளதாகவும். அத்துடன் அவரது  பதவி ஓய்வை முன்னிட்டு வழங்கப்பட்ட அனைத்து பரிசுப் பொருட்களையும் அவர் பொலிஸ் தலைமையகத்துக்கு கையளித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அவரது பதவிக் காலத்தில் பல்வேறு நாடுகளின் கருத்தரங்குகள் மற்றும் வைபவங்களில் வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களையும் பொலிஸ் தலைமையகத்திடமே ஒப்படைத்து விட்டுச் சென்றுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: