பரஸ்பர நலன் சார்ந்த விடயங்களில் இலங்கைக்கு கொரியக் குடியரசு தொடர்ந்தும் உதவும் – கொரிய தூதுவர் சந்துஷ் வூன்ஜின் ஜியோங் – அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் தெரிவிப்பு!

பரஸ்பர நலன் சார்ந்த விடயங்களில் இருதரப்பு மற்றும் பல்தரப்பு அமைப்புக்களில் இலங்கைக்கு உதவுவதற்கு தமது நாடு தொடர்ந்தும் உறுதிகொண்டுள்ளதாக கொரியக் குடியரசின் தூதுவர் சந்துஷ் வூன்ஜின் ஜியோங் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் இலங்கைக்கான கொரியக் குடியரசின் தூதுவர் சந்துஷ் வூன்ஜின் ஜியோங் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் இடம்பெற்றது.
இதன்போது வெளிநாட்டு அமைச்சரின் புதிய நியமனத்திற்காக பாராட்டுக்களை தெரிவித்த தூதுவர் வூன்ஜின், பரஸ்பர நலன் சார்ந்த விடயங்களில் இருதரப்பு மற்றும் பல்தரப்பு அமைப்புக்களில் இலங்கைக்கு உதவுவதற்கான தனது நாட்டின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் கல்வி, விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் மயமாக்கல், மருந்து உற்பத்தி, தொழிலாளர் இடம்பெயர்வு, மக்களுக்கிடையிலான பரிமாற்றம் மற்றும் பல்தரப்பு ஈடுபாடு உள்ளிட்ட கூட்டுறவு மற்றும் பரந்த அளவிலான ஒத்துழைப்பின் பகுதிகளை மையமாகக் கொண்டதாக இந்த சந்திப்பின் போதான கலந்துரையாடல் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|