பரம்பரிய முறையில் இருந்த பனை வளத்தை அறிவியலுடன் இணைத்து  அபிருத்தியில் வெற்றி கண்டவர்கள் நாம் – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்!

Wednesday, August 8th, 2018

பாரம்பரிய முறையில் இருந்துவந்த பனை வளத்தை அறிவியலுடன் இணைத்து அதன் தொழில் சார் அபிருத்திப் பணிகளில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பாரிய அளவு வெற்றிகண்டு சாதித்துக் காட்டியுள்ளது என கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்துள்ளார்.

பனை அபிவிருத்தி சபையின் 40 வது ஆண்டு நிறைவு விழாவும், “கற்பகம் சிறப்பு அங்காடி”திறப்பு விழாவும் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் டாக்டர். ஆர்.சிவசங்கர் தலைமையில் இடம்பெற்றது.

இதில் பனை அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவர் பசுபதி சீவரத்தினம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். –

மேலும் அவர் தெரிவிக்கையில் –

பாரம்பரியத்தை அறிவியலுடன் இணைக்கும் பனை ஆராய்ச்சி நிறுவனம் 2012ஆம் ஆண்டு, அன்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சராக இருந்த, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் முன்னெடக்கப்பட்டு பூரணமாக கட்டிமடிக்கப்பட்டு இன்று தலைநிமிர்ந்து காட்சிதருகின்றது.

டக்ளஸ் தேவானந்தாவின் தூரநோக்க சிந்தனையுடன் ஆரம்பித்த இந்த ஆராட்சி நிலையம் இன்று பன்மடங்கு அபிவிருத்தியுடன் பனை வளத்தின் பயன்பாடுகளும் அதிகரித்துள்ளது மட்டுமல்லாது  அதன் தரமும் மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

தற்போது இந்த விற்பனை நிலையத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் கைவினைப் பொருட்களை பார்க்கும் போது பனைசார்ந்த பொருட்களின் தரம், அதன் உற்பத்தி மேம்படுத்தப்பட்டிருக்கின்றது என்பதை தெளிவாக பார்க்கமுடிகிறது.

இவற்றை சந்தைப்படுத்தலின் விரிவாக்கத்தை அதிகரிக்க வேண்டும். பனை அபிவிருத்தியின் இரசாயான பௌதீக மற்றும் நுண்ணுயிர் கூறுகளை ஆய்வு செய்தல், பனைசார்ந்த புதிய கண்டுபிடிப்புக்களை மேற்கொண்டு பனையின் பயன்பாட்டை மேலும் அதிகரிப்பதுடன் பனை வளத்தை வாழ்வாதாரமாக கொண்ட மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதிலும் நாம் அக்கறை செலுத்துவனூடாக பனைவளத்தின் பாதுகாப்பு அதிகரிக்கபடும்.

இந்த செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் தற்போதைய பனை அபிவிருத்திச் சபையின் தலைவரான டாக்டர் ஆர்.சிவசங்கர் அவர்களின் செயற்பாடுகள், அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய முகாமையாளர்கள், பணியாளர்கள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் பனை அபிவிருத்தி தலைவர்களான பாக்கியநாதன், கோகுலதாசன் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பதிவு செய்யப்பட்ட 19 பனைசார் உற்பத்தி சங்கங்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

KP3 KP1

Related posts: