பரமேஸ்வராச் சந்தியில் கோர விபத்து – ஒருவர் பலி – ஆபத்தான நிலையில் ஒருவர்!

Wednesday, March 2nd, 2022

திருநெல்வேலி பரமேஸ்வராச் சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த அதேநேரம் மூவர் படுகாயமடைந்தனர்.

பலாலி வீதி பரமேஸ்வராச் சந்தியில் இன்று அதிகாலை 12 மணியளவில் மோட்டார் சைக்கிளை திருநெல்வேலிப் பகுதியில் இருந்து வந்த மகேந்திரா வாகனம் மோதித் தள்ளியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்த அதேநேரம் மேலும் ஒருவர் படுகாயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு மகேந்திராவில் பயணித்த இருவரும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் விசாரணையை மேற்கொண்டுவரும் கோப்பாய் பொலிசார் விபத்துடன் தொடர்புபட்ட வாகனங்களை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: