பரந்தன் விபத்தில் ஆறு பேர் காயம்!

Friday, March 1st, 2019

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் அதிசொகுசு பேருந்தொன்று பரந்தன் பகுதியில் விபத்திற்குள்ளாகியுள்ளது.

நேற்று இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் சாரதி உள்ளிட்ட ஆறு பேர் காயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்து பரந்தன் சந்தியில் பயணித்த போது, முல்லைத்தீவில் இருந்து வந்த பாரவூர்தியொன்று பிரதான வீதிக்கு நுழைய முற்பட்ட நிலையில், பேருந்தின் சாரதி விபத்தை தடுப்பதற்காக பேருந்தை மறுபுறத்திற்கு திருப்ப முற்பட்டதால் வீதிக்கு அருகில் இருந்த மரத்துடன் மோதியுள்ளதாக தெரிவிகப்படுகின்றது.

விபத்து தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: