பரந்தன் இரசாயன நிறுவனத்தால் பயன்படுத்தப்படும் காணியை, குறித்த கம்பனிக்கு நீண்டகாலக் குத்தகைக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, July 28th, 2021

பரந்தனில் பழைய இரசாயனத் தொழிற்சாலை அமைந்துள்ளதும், பரந்தன் கெமிகல்ஸ் கம்பனியால் பயன்படுத்தப்பட்டு வந்ததுமான காணியை, குறித்த கம்பனிக்கு நீண்டகாலக் குத்தகையின் அடிப்படையில் வழங்குவதற்காக கைத்தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கைத்தொழில் அமைச்சின் கீழ் காணப்படும் அரசாங்கத்திற்கு சொந்தமான வரையறுக்கப்பட்ட பரந்தன் கெமிகல்ஸ் கம்பனியின் பிரதான வர்த்தக நடவடிக்கையாக குடிநீர் சுத்திகரிப்பு செயன் முறைக்குத் தேவையான திரவக் குளோரின் இந்தியாவிலிருந்தும் பங்களாதேசத்திலிருந்தும் இறக்குமதி செய்து தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு விநியோகித்து வருகின்றது.

குறித்த கம்பனி உள்ளூரில் சோடியம் ஐதரொட்சைட் மற்றும் குளோரின் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையொன்றை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதுடன், ஐதரோகுளோரிக் அமிலம், பொலிஅலுமினியம் குளோரைட் மற்றும் சோடியம் ஹயிபோ குளோரயிட் போன்றன குறித்த கருத்திட்டத்தின் பிரதி உற்பத்திகளாக உற்பத்தி செய்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த கருத்திட்டத்திற்குப் பயன்படுத்தக்கூடியவாறு பரந்தனில் பழைய இரசாயனத் தொழிற்சாலை அமைந்துள்ளதும், 1954 ஆம் ஆண்டு தொடக்கம் வரையறுக்கப்பட்ட பரந்தன் கெமிகல்ஸ் கம்பனியால் பயன்படுத்தப்பட்டு வந்ததுமான காணியை, குறித்த கம்பனிக்கு நீண்டகாலக் குத்தகையின் அடிப்படையில் வழங்குவதற்காக கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: