பரந்தனில் வாகன விபத்து ; இளைஞன் ஒருவர் பரிதாப பலி!

பரந்தன் – பூநகரிக்கு இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
வடக்கு மாகாண திணைக்களத்தில் பணியாற்றும் 35 வயதான கோபாலபிள்ளை குகன் என்ற இளைஞனே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
வேலணையைச் சொந்த இடமாகவும் யாழ்ப்பாணம், ஆத்திசூடி பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் பிக்கப் வாகனத்தின் சில்லு ஒன்று காற்றுப் போனதால் கட்டுப்பாட்டையிழந்தமையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் இன்று நடத்தப்படவுள்ள முகாமைத்துவ உதவியாளர் போட்டிப் பரீட்சைக்கான கடமைக்கு உத்தியோகத்தர்கள் பயணித்த போதே விபத்து இடம்பெற்றது. விபத்தில் காயமடைந்த மேலும் நான்கு பேர் கிளிநொச்சி வைத்தியசாலை சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related posts:
இனவாதம் பரப்புவோரிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க விசேட பிரிவு !
யாழ்ப்பாணத்தில் 7 இடங்களில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு!
கல்விசார் ஊழியர்கள் எந்தவொரு கல்வி வலயத்திலும் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம் – அரசாங்கம் கோரிக்கை!
|
|