பயிலுநர் பட்டதாரிகளுக்கு விரைவில் நிரந்தர நியமனம் – உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Saturday, October 30th, 2021

பட்டதாரிகளுக்கான வெற்றிடங்கள் தொடர்பில் அரச நிறுவனங்களில் இருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களில் உள்ள வெற்றிடங்கள் மற்றும் நிரந்தர நியமனம் பெற்ற ஊழியர்களின் எண்ணிக்கை குறித்து ஆராய்வதில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரச சேவையில் பயிற்சி பெறுவதற்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பயிலுநர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதற்காக இத்தகவல் சேகரிக்கப்படுகின்றது.

இதுவரை 58 ஆயிரத்திற்கும மேற்பட்ட பட்டதாரிகள் அரச சேவையில் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரிகளை அரச சேவையில் நிரந்தர பதவிகளுக்கு நியமிக்க அமைச்சரவை அண்மையில் தீர்மானித்ததாகவும், அதற்கமைய அவர்களுக்கு துரிதமாக நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

Related posts: