பயிலுநர் ஆசிரியர் நியமனம் பெற்றவர்கள் கொடுப்பனவு நிலுவையைப் பெற முடியும் – கல்வியமைச்சின் பிரதம கணக்காளர் அறிவிப்பு!
Saturday, March 11th, 2017
பயிலுநர் ஆசிரியர்களாக 1988,1989 ஆண்டு காலப்பகுதியில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட மேலதிக கொடுப்பனவை உடனடியாக கல்வியமைச்சுடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என கல்வி அமைச்சின் பிரதம கணக்காளர் அறிவித்துள்ளார்.
மேற்படி காலப்பகுதியில் பட்டதாரி மற்றும் சாதாரண பயிலுநர்களாக நியமனம் பெற்றோருக்கு 100ரூபா மேலதிகக் கொடுப்பனவு வழங்கப்பட்டு அக் கொடுப்பனவு தேசிய சேமிப்பு வங்கியில் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டு வந்தது.. நிரந்தர நியமனம் வழங்கப்பட்டதும் இக் கொடுப்பனவு நிறுத்தப்பட்டது. இவ்வாறானவர்களின் சேமிப்பு மீது இன்னமும் மீளப்பெறப்படாது சில ஆசிரியர்களின் கணக்குகளில் உள்ளன.
இவற்றை வழங்குவதற்காக இக் கொடுப்பனவை சேமிப்பு வங்கியில் இருந்து பெற்றுக் கொள்ளாதோர் வலயக் கல்வி அலுவலகங்கள் ஊடாக கல்வி அமைச்சிற்கு அறியத்தருமாறு கல்வியமைச்சின் பிரதம கணக்காளர் அறிவித்துள்ளார்.
Related posts:
|
|