பயிலுநராக அரசாங்க சேவையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு 2022 ஜனவரி மாதம்முதல் நிரந்தர நியமனம் வழங்க ஏற்பாடு!

Saturday, November 13th, 2021

தற்பொழுது பயிலுநராக அரசாங்க சேவைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்ட 53 ஆயிரத்திற்கும் அதிக பட்டதாரிகளுக்கு 2022 ஜனவரி மாதம்முதல் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வரவு செலவுத் திட்ட உரையில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அதிபர், ஆசிரியர்கள் சம்பள முரண்பாட்டை ஒரே நேரத்தில் தீர்ப்பதற்கு, 30 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் ஆசிரியர் – அதிபர் சேவைகளின் சம்பள முரண்பாட்டை நீக்குமாறு கோரி ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வந்து அரசாங்கத்தின் மூலம் கொள்கை அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 2021.8.30 ஆம் திகதியை அமைச்சரவைத் தீர்மானத்தினை விரைவாகச் செயற்படுத்துவதற்காக மேலும் 30 ஆயிரம் மில்லியன் ரூபாவை சம்பளமாக உட்சேர்ப்பதற்கும் முன்மொழியப்படுகிறது.

இது அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சம்பளம் தொடர்பாக தற்பொழுது செலவிடப்படுகின்ற 109 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கு அதிக தொகையினை விட மேலதிக ஒதுக்கீடாகும்.

இதேவேளை தற்பொழுது பயிலுநராக அரசாங்க சேவைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்ட 53 ஆயிரத்திற்கும் அதிக பட்டதாரிகளுக்கு 2022 ஜனவரி மாதம் முதல் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்காக 27 ஆயிரத்து 600 மில்லியன் ரூபா செலவாகுமென எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை, குறித்த முழுத் தொகையினையும் இவ் வரவுசெலவுத்திட்டத் தில் ஒதுக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், தற்பொழுது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 20 ஆயிரம் மில்லியன் ரூபாவை மேலதிகமாக மேலும் 7 ஆயிரத்து 600 மில்லியன் ரூபாவை இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: