பயிற்றைகளைத் தாக்குகிறது இலைச்சுரங்க மறுப்பி நோய்!
Friday, February 15th, 2019வடக்கில் படைப்புழுவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் நானாட்டான் பிரதேசத்தில் பயிற்றஞ்செடிகளைத் தாக்கும் இலைச்சுரங்க மறுப்பி என்னும் பூச்சித் தாக்கம் பரவலாக இனங்காணப்பட்டுள்ளது.
நானாட்டான் பிரதேசத்தில் இராசமடு, அருவியாறு, மடுக்கரை உட்பட பல இடங்களில் இந்த நோய்த் தாக்கம் இனங்காணப்பட்டுள்ளது.
இந்தப் பூச்சித் தாக்கமானது கடும் வெயிலினாலும் பயிர்களுக்குப் போதிய அளவு இடைவெளி இல்லாமல் நெருக்கமாகக் காணப்படுவதாலும் ஏற்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு இயற்கை முறை பீடை விலக்கிகளான வேப்பம் இலை கரைசலைப் பயன்படுத்த முடியும்.
Related posts:
ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு மேலதிகமாகவும் நாளை யாழ். குடாநாட்டில் மின்தடை!
மேற்கூரை சூரிய மின்சக்திக்கான கட்டணங்கள் அடுத்த வாரம் திருத்தப்படும் - மின்சக்தி அமைச்சர் காஞ்சன வி...
மின்கட்டண அதிகரிப்பு - அனைத்து கைத்தொழில் உற்பத்திப் பொருட்களும் 20 வீதத்தால் அதிகரிக்கப்படுவதாக இலங...
|
|