பயிற்றுவிக்கப்பட்ட தொழிற்றுறைகளைச் சார்ந்தோரை வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு அனுப்பும் பணி ஆரம்பம்!

25, ஆயிரம் பயிற்றுவிக்கப்பட்ட தொழிற்றுறைகளைச் சார்ந்த இலங்கை இளைஞர்களை வெளிநாட்டு வாய்ப்புகளுக்கு அனுப்பும் முதல் கட்டம் ஆரம்பமாகியுள்ளது.
அதன்படி, முதல் கட்டத்தின் கீழ், ருமேனியாவில் பணி புரிய 200 பேருக்கு அவ்வாறான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் தமித விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக மாதத்திற்கு 2000 முதல் 2500 பேரை அனுப்ப திட்டமிட்டுள்ளபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பயிற்சியற்ற ஊழியரை வெளிநாட்டு வேலைக்காக அனுப்புவதன் மூலம் நாட்டிற்கு கிடைக்கின்ற அந்நியச் செலாவணியை விட, ஒரு திறமையான தொழிலாளியை வெளிநாட்டு வேலைக்காக அனுப்பி அதன் மூலம் நான்கு மடங்குகள் அதிகமான அந்நியச் செலாவணியை ஈட்டமுடியும் என்று தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் தமித்த விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|