பயிற்றப்படாத ஆசிரியர்களை ஆரம்ப பிரிவுக்கு இணைத்துக் கொள்வதே ஆரம்ப நிலை கல்வியின் தோல்விக்கு காரணம் – கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த சுட்டிக்காட்டு!

பயிற்றப்படாத ஆசிரியர்களை ஆரம்ப பிரிவுக்கு இணைத்துக் கொள்வதே ஆரம்ப நிலை கல்வியின் தோல்விக்கு காரணம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்ததெரிவித்துள்ளார்.
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில் –
ஆரம்ப நிலை கல்வியின் வெற்றி, மாணவர்களின் இரண்டாம் நிலை மற்றும் உயர் கல்வியின் வெற்றிக்காக மிகவும் தீர்மானம் மிக்கதாக தாக்கம் செலுத்துகின்றது.
கடந்த கொரோன தொற்று காலத்தில் தவறி போன ஆரம்ப கல்வி வாய்ப்பை யதார்த்தமாக்கும். இறுதி கட்டத்தை தற்பொழுது, தாண்டியிருக்கும் கல்வி அமைச்சு ஒட்டுமொத்த பாடசாலை கட்டமைப்பு தொடர்பாகவும், கவனம் செலுத்தி மாணவர்களின் உரிமைகளை பாதுகாத்து கொடுப்பதற்காக உழைக்கின்றது.
பயிற்றப்படாத ஆசிரியர்களை ஆரம்ப பிரிவுக்கு இணைத்துக் கொள்வதே மாணவர்களின் ஆரம்ப நிலை கல்வியின் தோல்விக்கு பிரதான காரணம். எனவே,ஆசிரியர்கள் மிகவும் கவனமாகவும், அர்ப்பணிப்புடனும் செயலாற்றுவதற்கு தயாராகிய ஆசிரியர்களாயே கல்வித்துறையில் சேவை செய்வதற்கு இணைத்துக்கொள்ள வேண்டும்.
அணைத்தான் பிரகாரம், ஆசிரியர் என்ற வகையில் தேவையான அறிவு, சிந்தனை மற்றும் திறமைகளை மேம்படுத்திக் கொண்டு குறித்த தகைமைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
குறித்த பயிற்சிகளின் ஊடாக மனித வளங்களை முகாமைத்துவம் செய்து கொள்வது அத்தியாவசியமான ஒன்றாககும்.
2024 ஆம் ஆண்டில், கல்வி ஆக்கபூர்வமான மாற்றத்துடன் மற்றும் புதிய செயற்பாடுகளுடன் திருப்திகரமான கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டு சர்வதேசத்தை வெற்றிகொள்ளும் சந்தர்ப்பத்தை எமது நாட்டு பிள்ளைகளிற்கு விரிவாக்குவதே கல்வி அமைச்சின் பிரதான நோக்கம்.
அத்துடன், 2024 ஆம் ஆண்டிலிருந்து 5 ஆம் தர புலமை பரிசில் பரீட்சை உட்பட சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைகள் வரை உரிய காலத்தில் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|