பயிர்களை அழிக்கும் உயிரினங்களை கொல்ல விவசாய அமைச்சர் அனுமதி – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Saturday, February 18th, 2023

பயிர்களை அழிக்கும் குரங்குகள், மயில்கள், முள்ளம்பன்றிகள் மற்றும் காட்டுப்பன்றிகள் போன்றவற்றை கொல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

உருளைக்கிழங்கு விவசாயிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் வன விலங்குகள் கொல்லப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக வனவிலங்குகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதாகவும் விவசாயிகள் இதன்போது அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர்.

எனவே, தங்களது பயிர்களை பாதுகாக்க அமைச்சர் உடனடி தீர்வு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்தநிலையில் குறித்த கோரிக்கையை ஆராய ஒரு குழு நியமிக்கப்பட்டு, பயிர்களை சேதப்படுத்தும் வன விலங்குகள் குறித்து இறுதி அறிக்கை பெறப்பட்டது.

இதன்படி, குரங்குகள், மயில்கள், ராட்சத அணில், முள்ளம்பன்றிகள், காட்டுப்பன்றிகள் போன்ற விலங்குகள் அழிந்து வரும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

எனவே இந்த விலங்குகளைக் கட்டுப்படுத்துவதற்கு அவற்றைக் கொல்வதைத் தவிர வேறு எந்த மாற்றுத் தீர்வும் மற்ற நாடுகளால் காணப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: