பயன்பாட்டில் இருந்து அகற்றுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கின் இரண்டாவது பட்டியலையும் தடை செய்வதற்கான நடவடிக்கை – அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிப்பு!

Thursday, June 10th, 2021

இலங்கையில் பயன்பாட்டில் இருந்து அகற்றுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கின் இரண்டாவது பட்டியலையும் தடை செய்வதற்கான நடவடிக்கையினை துரிதப்படுத்துமாறு சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர, மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் 5 வகையான உற்பத்தி பொருட்களை கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதிவரை தடை செய்வதற்கு சுற்றாடல் அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

அத்துடன் தடை செய்யப்படவுள்ள பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்திகளின் இரண்டாவது பட்டியலும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையிலேயே இரண்டாவது பட்டியலையும் தடை செய்வதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர, மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: