பயன்படுத்திய முகக்கவசங்களை உரிய முறையில் அப்புறப்படுத்துங்கள் – பொதுமக்களிடம் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை கோரிக்கை!

Friday, January 8th, 2021

பயன்படுத்திய முகக்கவசங்களை உரிய முறையில் அப்புறப்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் பொது மேலாளர் வைத்தியர் டெர்னி பிரதீப் குமார குறித்த கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது, அப்புறப்படுத்தப்பட்ட சுமார் 150 கோடி முகக்கவசங்கள் கடலுக்குள் வீசப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே நாடு மற்றும் சுற்றுச்சூழலையும் கடற்கரையையும் பாதுகாக்க உதவுமாறும் பொதுமக்களிடம் அவர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: