பயண சீட்டின்றி பயணித்த 40 பேர் கைது!

Sunday, October 1st, 2017

புகையிரதத்தில் பயண சீட்டின்றி பயணித்த 40 பேர் மருதானை புகையிரத நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு மணித்தியாலங்கள் வரை மேற்கொண்ட சுற்றிவளைப்பு ஒன்றின் போது, குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக புகையிரத பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்போது 30 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அபராத தொகையை செலுத்திவிட்டு சென்றதுடன் 10 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.குறித்து நபர்களிடம் இருந்து 90 ஆயிரம் ரூபா வரை அறவிடப்பட்டுள்ளதாக புகையிரத பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related posts: