பயண எச்சரிக்கையை நீக்கியது சீனா – தளர்த்தியது அமெரிக்கா!

இலங்கை தொடர்பான பயண எச்சரிக்கையை சீனா நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. ஜூன் 22 ஆம் நாள் தொடக்கம் இந்த பயண எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக, சீன அரசின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 ஆம் நாள், இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை அடுத்து, இலங்கைக்கு பயணம் செய்யும் தமது நாட்டவர்களுக்கு ஆலோசனை வழங்கும் பயண எச்சரிக்கையை சீனா வெளியிட்டிருந்தது.
பின்னர் இந்தப் பயண எச்சரிக்கையில் திருத்தம் செய்யப்பட்ட நிலையில், ஜூன் 22 ஆம் நாளில் இருந்து அந்தப் பயண எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
பயண எச்சரிக்கையை முழுமையாக முதல் நாடாக சீனா இருக்கிறது என்றும், இப்போது இலங்கை தொடர்பான எந்த பயண எச்சரிக்கையும் கிடையாது என்றும், சீன அரசாங்க பேச்சாளர் தெரிவித்தார்.
அதேவேளை, இலங்கை தொடர்பான பயண எச்சரிக்கையில் அமெரிக்கா தளர்வை ஏற்படுத்தியுள்ளதாக நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.
மூன்றாவது நிலை பயண எச்சரிக்கையில் இருந்து, இரண்டாவது நிலை பயண எச்சரிக்கையாக குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|