பயணிகள், சரக்கு போக்குவரத்து போன்றவற்றுக்கான ரயில் கட்டணத்தில் திருத்தத்தை மேற்கொள்ள நடவடிக்கை – வெளியானது வர்த்தமானி அறிவித்தல்!

Thursday, July 21st, 2022

ரயில் கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவின் கையொப்பத்துடன் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, பயணிகள், சரக்கு போக்குவரத்து போன்றவற்றுக்கான ரயில் கட்டணத்தில் திருத்தத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரயில் கட்டண திருத்தத்தின்படி, ரயில் கட்டணம் பஸ் கட்டணத்தில் பாதியாக இருக்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.

இதேவேளை, வெளிநாட்டு தபால் கட்டணங்களை அடுத்த மாதம் முதலாம் திகதிமுதல் திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கேற்ப வெளிநாட்டு விமான தபால் கட்டணங்கள் மற்றும் கடல் தபால் கட்டணங்கள் மற்றும் அதிவேக தபால் கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தபால் திணைக்கள கட்டளைச் சட்டத்தின் கீழ், வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன, தபால் கட்டணங்களை திருத்தியமைத்துள்ளதுடன், அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: