பயணிகள் இலகுரக விமானம் விபத்து – மூவர் காயம்!

Monday, December 27th, 2021

பயணிகள் இலகுரக விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட போது ஏற்பட்ட விபத்தில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டான கிம்புலாபிட்டிய பகுதியில் விமானத்தை தரையிறக்க விமானி நடவடிக்கை எடுத்துள்ளதாக விமான சேவை நடவடிக்கை பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளார்.

விபத்தில் இரண்டு விமானிகள் மற்றும் பெண் ஒருவர் அடங்களாக மூவர் காயமடைந்து நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை விமானப்படையின் குழுவொன்று சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கு சில நாட்களுக்கு முன்னர், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இலகுரக விமானம் ஒன்று பயாகல கடற்கரையில் அவசரமாக தரையிறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: