பயணிகளுடன் சரிந்தது நெடுந்தாரகை!

குறிகாட்டுவானிலிருந்து நெடுந்தீவிற்கு பயணிகளை ஏற்றி வந்த நெடுந்தாரகை தரைதட்டும்போது சிறிது சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இலங்கை கடற்படையினரது உடனடி செயற்பாடகள் மூலம் பயணிகள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
குறிகாட்டுவானுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே பயணிகள் சேவையில் ஈடுபட்ட நெடுந்தாரகை இன்று காலை 10.30 மணியளவில் நெடுந்தீவில் தரைதட்டியது. இதன்போதே சிறிது சரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பயணத்தின்போது நெடுந்தாரகையில் வெளிநாட்டுப் பயணிகளும், பாதிரியாரும், மற்றும் பொது மக்களும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக விரிவானதொரு செயற்திட்டம் - ஜனாதிபதி!
20 ஆயிரம் கிலோ வெல்லத்தை உற்பத்தி செய்ய பனை அபிவிருத்திச் சபை நடவடிக்கை!
பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 480 மில்லியன் வழங்கப்பட்டது - கல்வி அமைச்சின் செயலாளர் தெர...
|
|