பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மோப்ப நாய்கள் – ரயில்வே திணைக்களம்!

Wednesday, May 8th, 2019

புகையிரதத்தில் பயணிப்பவர்களின் பயணப்பொதிகளை சோதனையிடுவதற்கு பயிற்சியளிக்கப்பட்ட மோப்பநாய்களை ஈடுபடுத்துவதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

புகையிரத நிலையங்களின் நுழைவாயிலில் ஏற்படும் சன நெருக்கடியைத் தவிர்ப்பதற்கும் பயணப்பொதிகளை விரைவில் சோதனையிடுவதற்கும் இதனூடாக எதிர்பார்க்கப்படுவதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இந்த நடவடிக்கைகளுக்காக விமானப்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஒத்துழைப்பை கோரவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, ரயில்வே பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக, சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் ரயில் நிலையங்களில் கடமைகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தூர ரயில் சேவைகளிலும் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளூடாக திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

Related posts: