பயணத்தின் போது குழந்தைகளுக்கு தலைக்கவசம் அவசியம்!

Saturday, December 2nd, 2017

சிறு பிள்ளைகளை மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிச் செல்லும் போது அவசியம் தலைக்கவசம் அணிந்த நிலையில் அழைத்துச் செல்லுமாறும் அவ்வேளையில் எதிர்பாராமல் விபத்து ஏற்பட்டால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படாது என சாவகச்சேரி ஆதார மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மோட்டார்சைக்கிள் செலுத்துபவரினதும் பெற்றோரின் அசண்டையீனம் பிள்ளையின் உயிருக்கு உலை வைத்துவிடும். இதனைக் கருத்திற் கொண்டு பிள்ளைகளை எங்கு அழைத்துச் சென்றாலும் அவர்களுக்கும் தலைக்கவசம் அணிந்து கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மிருசுவில் கெற்பெலிப் பகுதியில் நேற்றுக்காலை முன்பள்ளியில் பிள்ளையை விடுவதற்காக ஏற்றிச் சென்ற வேளையில் நாயுடன் மோட்டார்சைக்கிள் மோதியது. தலைக்கவசம் அணியாத நிலையில் கொண்டு செல்லப்பட்ட நான்கு வயதுக் குழந்தைக்கு தலையிலும் முகத்திலும் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

இதனால் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தையை மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு அனுப்பிய பின்னர் மருத்துவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

Related posts: