பயணக்கட்டுப்பாடுகள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பொருந்தாது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பொருந்தாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைய, சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் பிரவேசிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் (Bio-bubble) பயோ பவுள் திட்டத்தின் ஊடாக தெரிவு செய்யப்பட்டுள்ள பகுதிகளுக்கு மாத்திரமே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாப் பயணிகள் தங்களுக்கான ஹோட்டல்களுக்கு அறிவித்து, தாம் தங்குவதற்கான வசதிகளையும் ஏற்படுத்திக்கொள்ளுதல் வேண்டும் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் வலியுறுத்தியுள்ளார்.
அதற்கமைய, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தர எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தகக்து.
Related posts:
|
|