பயங்கரவாத தாக்குதல் – 23 சிறுவர்கள் உயிரிழப்பு!

Wednesday, June 12th, 2019

நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களில் 23 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுடன் இணைந்து, தாக்குதல் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மேற்கொண்ட ஆய்வொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது

உயிரிழந்தவர்களில் 18 பேர் பெண் பிள்ளைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தாக்குதலின் பின்னர் சிறுமியொருவர் காணாமல் போயுள்ளதாகவும், 61 சிறார்கள் காயமடைந்துள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி H.M. அபயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், ஏப்ரல் 21 தாக்குதல்களில் 26 பிள்ளைகள் தங்களின் பெற்றோர்களை இழந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு ஏதேனும் வகையில் உதவ விரும்புவோர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Related posts: