பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராய தெரிவுக்குழு!

Wednesday, May 22nd, 2019

நாட்டில் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிப்பது தொடர்பிலான பிரேரணை இன்று(22) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்தப் பிரேரணை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், இன்றைய தினத்திலேயே வாக்கெடுப்பை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்தத் தெரிவுக்குழுவில் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: