பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசேட மூவரடங்கிய விசாரணை குழுவின் நடவடிக்கைகள் ஆரம்பம்!
Tuesday, April 30th, 2019ஈஸ்டர் தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட விசேட மூவரடங்கிய விசாரணை குழு சம்பந்தப்பட்ட நபர்களிடம் வாக்குமூலங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
குறித்த சம்பவங்களுடன் தொடர்புடைய பிற காரணிகள் தொடர்பில் விடயங்களை ஆராய்ந்து அது தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் தகவல்களை அறிக்கையிடுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருந்தார்.
இந்த விசாரணைக்குழுவில் உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட , அமைச்சின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் என்.கே.இளங்ககோன் ஆகியோர் அடங்குகின்றனர்.
Related posts:
புகையிரத ஊழியர்கள் வேலைநிறுத்தம்!
மாலபே SAITAM தனியார் மருத்துவக் கல்லூரியைத் தடை செய்ய வலியுறுத்தி யாழில் மாபெரும் பேரணி!
இலங்கையில் இருக்கும் ரஷ்யர்கள், உக்ரேனியர்கள் விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும் - பொது பாதுகாப்பு அம...
|
|