பயங்கரவாத தாக்குதல்களுடன் சவூதி அரேபிய பிரஜைகளுக்கு தொடர்பா?

Tuesday, June 18th, 2019

நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களுடன் சவூதி அரேபிய பிரஜைகள் யாரும் தொடர்புபட்டுள்ளனரா? என விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இது குறித்த விசாரணைக்கு சவுதி அரேபிய அதிகாரிகளின் ஒத்துழைப்பை இலங்கை கோரவுள்ளதாக கூறப்படுகின்றது. 

காவற்துறை தகவல்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னர் பாசிக்குடாவிலுள்ள விருந்தகமொன்றில் பதிவான சீ.சி.டிவி காணொளியில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவுடன் 3 சவுதி பிரஜைகள் அடையாளம் காணப்பட்டனர்.

அவர்கள் தொடர்பில் ஹிஸ்புல்லாவின் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், பயங்கரவாத தடுப்புபிரிவில் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஏப்ரல் 21 தாக்குதலுடன் சவுதி பிரஜைகள் யாரும் தொடர்பு கொண்டுள்ளனரா என்பதை ஊர்ஜிதப்படுத்த சவுதி அரேபிய அதிகாரிகளிடம் இலங்கை காவற்துறை ஒத்துழைப்பை கோரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: