பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்ட நபர் இலங்கையர் என்பதில் கவலையடைகிறோம் – அமைச்சர் தினேஷ் தெரிவிப்பு!

Tuesday, September 7th, 2021

நியூசிலாந்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்ட நபர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதில் கவலையளிப்பதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் அவசரகால சட்ட ஒழுங்குவிதிகள் நிறைவேற்றும் வகையில் இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர், இந்த தாக்குதலை அரசாங்கம் வன்மையாக கண்டிப்பதாகவும் கூறியிருந்தார்.

மேலும் இந்த தாக்குதலால் நியூசிலாந்து அரசாங்கதிற்கும் அந்நாட்டு மக்களுக்கும் ஏற்பட்டுள்ள கவலையில் இலங்கை அரசாங்கம் பங்கெடுப்பதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதேநேரம் சர்வதேச ரீதியாக மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இதன்போது மேலும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


அரசு வழங்கிய வாக்குறுதிகள் எவை? தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் வெளிப்படையாக கூறவேண்டும் - ...
இலங்கையின் உறுதியான நம்பகமான பங்காளியாக இந்தியா எப்போதும் இருக்கும் – நிதி அமைச்சர் பசிலுடனான காணொளி...
'எரோப்லொட்' விமானத்துக்கான தடையை நீக்குமாறு முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தை ஆராய திகதியிடப்பட்டது!