பயங்கரவாத தாக்குதலின் எதிரொலி; முன்னாள் பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபரிடம் விசாரணை!

Wednesday, May 1st, 2019

ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தரவிடம் சிறப்பு விசாரணை குழு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உயிர்தெழுந்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்வதற்காக குறித்த குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: