பயங்கரவாத தடைச் சட்டத்தைத் திருத்தம் செய்வது தொடர்பில் பிரித்தானியாவுடன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கலந்துரையாடல்!

Monday, October 11th, 2021

1979 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தைத் திருத்தம் செய்வது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவுக்கும், பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சரா ஹல்டனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் பிரித்தானியா மற்றும் இலங்கைக்கு இடையில் நிலவும் நீண்ட கால உறவினை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறிப்பாக பாதுகாப்பினை மேம்படுத்துவதற்கும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களில் இரு நாடுகளிலும் அதன் பிரதிநிதிகளை அதிகரிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாகப் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: