பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவோரை கண்டறிய மக்களின் ஒத்துழைப்பு அவசியம் – அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!

Monday, April 12th, 2021

நாட்டில் அடிப்படைவாத கொள்கைகளுடன் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து கண்டறிவதற்கு பொதுமக்களின் உதவி அவசியம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் –

சில அடிப்படைவாத கோட்பாடுகளுடன் ஏனைய மதத்தினர் மீது சிலர் தாக்குதல் நடத்துகின்றனர். இதுவே கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் இடம்பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அவ்வாறான அடிப்படைவாத கொள்கைகளுடன் உள்ளவர்கள் முதலில் கண்டறியப்பட வேண்டும். அவ்வாறான அடிப்படைவாத கொள்கைகள் இல்லாது செய்யப்பட்டாலே நாட்டின் எதிர்கால பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.

உனவே குறித்த நபர்களை கண்டறிவதற்கு முப்படையினராலும், புலனாய்வு பிரிவினராலும் மாத்திரம் இயலாது. அதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிக அவசியமாகும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: